Thursday, May 24, 2012

முகம்மது வரலாற்றில் இருந்தாரா? Did Muhammad Exist? புத்தக விமர்சனம்

ஜோம்பி
இயேசு என்ற நபர் வரலாற்றில் இருந்திருக்கிறாரா என்பதற்கு தடயங்களை பல
நூற்றாண்டுகளாக ஆய்வாளர்கள் ஆராய்ந்திருக்கிறார்கள். உண்மையான இயேசுவை
பற்றி நூற்றுக்கணக்கான புத்தகங்கள், ஆவணப்படங்கள், பத்திரிக்கை
கட்டுரைகள், ஆய்வுக்கட்டுரைகள், திரைப்படங்கள்
உருவாக்கப்பட்டிருக்கின்றன. கிறிஸ்துவத்தின் மிகவும் ஆதாரமான தோற்றம்
எப்போது எங்கே என்பது இன்னும் ஆய்வுக்குரியதாக இருந்தாலும், மத
ஆய்வுகளில் இப்படிப்பட்ட தேடல் மிகவும் சாதாரணமான ஒன்றாகத்தான்
இருக்கிறது. வரலாற்றுரீதியாக இயேசு என்ற நபர் இருந்தார் என்பதற்கு
தடயங்கள் இல்லை என்பதை பெரும்பாலான ஆய்வாளர்கள் கூறினாலும், இப்படிப்பட்ட
ஆய்வுகள் பரவலாகவே இருக்கின்றன.

ஆனால், முகம்மது வரலாற்றில் இருந்திருக்கிறாரா என்பதை பற்றி ஒரு ஆய்வு
நடந்ததே இல்லை என்றே சொல்லலாம். ஏன் இல்லை?

ஜோசப் ஸ்மித், மார்ட்டின் லூதர், ஆண்டன் லெவி போல முகம்மதுவுக்கும் அவர்
இருந்தார் என்பதற்கான தடயங்கள் ஏராளம் என்பதால் முகம்மது வரலாற்றில்
இருந்த ஒரு நபரா இல்லையா என்பதை பற்றி ஆராயவில்லை என்று பலரும்
கருதுகிறார்கள். முகம்மதுவின் போதனைகள் ஒழுக்கரீதியில் சரியானவையா,
இல்லையா, அவை பிரயோசனமானவையா அல்லவா என்பதை விட, அவர் நிச்சயமாக
இருந்திருக்கிறார் என்றுதான் கடுமையாக இஸ்லாமை எதிர்ப்பவர்களும்
கருதுகிறார்கள். இல்லையா?

உண்மையில் இல்லை. குறைந்தது, ராபர்ட் ஸ்பென்ஸர் எழுதி வெளிவந்திருக்கும்
புத்தகம், முகம்மது என்பவர் வரலாற்றில் இருந்திருக்கிறாரா இல்லையா என்பதை
ஆராய்கிறது.

தடயம் இல்லை என்பது இல்லை என்பதற்கான தடயம் ஆகாது என்பது உண்மை
என்றாலும், தனது புத்தகமான "Did Muhammad Exist? " என்ற புத்தகத்தில்,
முகம்மது வரலாற்றில் இருந்திருக்கிறார் என்பதற்கு எந்த விதமான தடயமும்
இல்லை என்பதை மிகவும் தேர்ச்சியுடனும் ஆதாரப்பூர்வமாகவும்
நம்பத்தகுந்ததாகவும் எழுதியிருக்கிறார். ஸ்பென்ஸரே சொல்வது போல,
"முகம்மது என்ற நபர் வரலாற்றில் இல்லை என்று நிரூபிப்பது முடியாத
காரியம்" என்பதை கூறும் ஸ்பென்ஸர், எந்த ஆதாரமும் இல்லாத நிலையில்,
முகம்மதை பற்றிய இஸ்லாமிய கதையாடலை அப்படியே உண்மை என்று ஏற்றுகொள்வது
தேவையற்றது. (நமக்கு இருக்கும் ஒரு சில ஆதாரங்களை வைத்து, முகம்மதின்
தோற்றத்துக்கான வேறு கதையாடல்கள் இருக்கும் ஆதாரங்களுக்கு பொருந்திச்
செல்கின்றன என்பதையும் பார்ப்போம்)

ஆதாரங்கள்.

இந்த பெரிய விஷயத்தை அணுகுவதற்கு ஸ்பென்ஸர் ஐந்து முக்கிய செய்திகளை
எடுத்துகொள்கிறார்.

1. 7ஆம் நூற்றாண்டு, 8ஆம் நூற்றாண்டில் முஸ்லீம் அல்லாதவர்கள் எழுதிய ஆவணங்கள்.
2. அரபியர்கள்/முஸ்லீம்களே எழுதிய 7 /8 ஆம் நூற்றாண்டு ஆவணங்கள்.
3. குரான்
4. ஹதீஸ், இஸ்லாமிய விரிவுரைகள், போதனைகள் 8 /9 ஆம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்டவை
5. முகம்மதுவின் வாழ்க்கைக்கு பின்னர் சுமார் 100 ஆண்டுகள் கழித்து,
இபின் இஷாக் எழுதிய முகம்மதுவின் வாழ்க்கைவரலாறு . இந்த வரலாற்றின்
அடிப்படையிலேயே பிற வாழ்க்கைவரலாறுகள் எழுதப்பட்டன.

200 பக்கங்களில், ஒவ்வொரு பிரிவையும் ஆராய்ந்து, முகம்மதுவின் வரலாற்று
ஆதாரத்துக்கு தடயமே இல்லை என்று நிரூபிக்கிறார்.

இஸ்லாமை சந்தேகக்கண்ணுடன் பார்க்கும் என்னைப் போன்றவருக்கு, முதலாவது
பிரிவே மிகவும்முக்கியமானதாக இருக்கும். அதுவே சுதந்திரமான ஒரு
தடயமாகவும் இருக்கும். பெரும்பாலான மதங்களது புனித நூல்கள் போலவே,
இஸ்லாமின் புனிதநூல்களும், தன்னைத்தானே சரி என்றும், தன்னையே தனக்கான
ஆதாரமாகவும் அளிக்கும் என்றுமே நான் அனுமானம் செய்தேன்( அது தவறு என்று
பின்னால் அறிந்தேன். அது பின்னர்)

ஆகவே, முஸ்லீமல்லாதவர்கள் முகம்மதுவின் வாழ்நாளில் அவரைப் பற்றி என்ன
சொன்னார்கள், அல்லது 60 வருடத்துக்கு பிறகு என்ன சொன்னார்கள்?

ஒன்றுமே இல்லை.

எட்டாம் நூற்றாண்டு வரை முகம்மதுவை பற்றியோ, ஏன் இஸ்லாமை பற்றியோ கூட
எந்த ஒரு செய்தியும் ஆவணௌம் முஸ்லீமல்லாதவர்கள் எழுதவில்லை. அரபியாவின்
மத்தியில் இருக்கும் ஒரு பழங்கால தூரத்திய அனாமதேயமாக இருக்கும் ஒரு
மதத்தை பற்றி மற்றவர்கள் எழுத என்ன தேவை என்று நீங்கள் நினைத்தால், அது
தவறு. முகம்மதுவின் இறப்பு நடந்ததாக சொல்லப்படும் 632இலிருந்து துவங்கி
அரபியர்கள் தங்களது பாலைவனத்தை விட்டு கிளம்பி முழுமையான மத்தியக்கிழக்கு
முழுவதும் ஆக்கிரமித்து கைப்பற்றினார்கள். இன்னும் சில பத்தாண்டுகளில் வட
ஆப்பிரிக்கா, பெர்ஷியா என்று ஆக்கிரமித்தார்கள். பல கலாச்சாரங்களையும்,
சமூகங்களையும் எதிர்கொண்டார்கள். ஆனால் அவர்களில் ஒருவருக்குமே இஸ்லாம்
என்றோ முகம்மது என்றோ எதுவும் கேள்விப்பட்டதில்லை. ஸ்பென்ஸர் அத்தியாயம்
இரண்டில் குறிக்கிறார்.

"அரபிய ஆக்கிரமிப்புகள் வரலாற்று ரீதியான உண்மைகள். ஆனால், அரபிய
ஆக்கிரமிப்பாளர்கள் அரபியாவை விட்டு கிளம்பி ஆக்கிரமிக்க இறங்கியது
முகம்மதுவாலும், குரானாலும் என்பது சந்தேகத்துக்கு இடமானது."

முகம்மதின் வாழ்க்கைக்கும், அவரது இறப்புக்கு பின்னர் உடனடியாகவும்
மத்திய கிழக்கை தங்களது புதிய மதமான இஸ்லாமின் கீழ் கொண்டுவந்த பின்னரான
இஸ்லாமின் ஆரம்ப கால வருடங்களை பற்றிய இஸ்லாமிய கதையாடல்களின் மீது
சந்தேகம் கொள்ள நிறைய புதிரான செய்திகள் இருக்கின்றன. உதாரணமாக,
ஆண்டியாக்கில் Antioch ஒரு கிறிஸ்துவருக்கும் ஒரு அரபி தளபதிக்கும் நடந்த
மத விவாதம் ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது. இதனை ஸ்பென்ஸர் குறிக்கிறார்.

"அதில் அந்த ஆவணத்தை எழுதியவர் அரபியர்களை முஸ்லீம்கள் என்று
குறிக்கவில்லை. ஹாகரியர்கள் என்று குறிக்கிறார். "Hagarians" (mhaggraye)
அதாவது ஆப்ரஹாமின் வைப்பு மனைவியும், இஸ்மாயீலின் தாயாருமான ஹாகரது
மக்கள் என்ற பெயரில் குறிக்கிறார். அரபிய தளபதி இஸ்லாமிய போதனைக்கு ஏற்ப
இயேசு கிறிஸ்துவின் கடவுள்தன்மையை மறுக்கிறார். ஆனால், ஒரு இடத்திலும்
குரானை பற்றியோ, இஸ்லாம் பற்றியோ, முகம்மது பற்றியோ பேசவேஇல்லை. இரு
புறத்திலும் பேசவில்லை."

ஒரு "கிறிஸ்துவ"ரிடம் பைபிள், கிறிஸ்துவம், இயேசு கிறிஸ்து பற்றியே ஒரு
போதும் பேசாமல் மதத்தை பற்றி விவாதம் பண்ணுவதை பற்றி கற்பனை செய்து
பாருங்கள். அவர் "கிறிஸ்துவர்" தானா என்று உங்களுக்கு ஐயம் வரத்தானே
செய்யும்?

புத்தகத்தின் மைய கருத்துக்கு தாவினால், அதனைத்தான் ஸ்பென்ஸர்
குறிப்பிடுகிறார். அதாவது ஏழாம் நூற்றாண்டு அரபியர்கள் ஒரு மாதிரியான ஒரு
கடவுள் தத்துவத்தை பின்பற்றி வந்திருக்கிறார்கள். அது அங்கிருந்த யூத
மதம், கிறிஸ்துவம் ஆகியவற்றின் கலவையாக இருக்கிறது. இந்த புதிய
மதத்துக்கு ஆரம்பத்தில் பெயர் ஏதும் இல்லாமல் இருந்திருக்கிறது. அதற்கு
ஒரு நிறுவனரும் இல்லாமல் இருந்திருக்கிறது. அதற்கு புனித புத்தகமும்
இல்லாமல் இருந்திருக்கிறது. அதற்கு கடுமையான விதிமுறைகளும் இல்லாமல்
இருந்திருக்கிறது. இவை அனைத்தும் பின்னால் சேர்க்கப்பட்டிருக்கின்றன.
பின்னால் யோசித்து ஏழாம் நூற்றாண்டில் ஆரம்பிக்கப்பட்டதாக கதை
விடப்பட்டிருக்கிறது.

அரபிய ஆவணங்களிலும், பழம்பொருள் ஆய்வுகளிலும் எந்த இடத்திலும் குரான்
பற்றிய குறிப்பே இல்லை. அது முதன் முதலில் 691இல்தான் அந்த குறிப்பு
வருகிறது. அதாவது முகம்மது குரானை சொல்ல ஆரம்பித்ததாக
கூறப்படுவதிலிருந்து 80 வருடங்களுக்கு பிறகு! அரபிய சமூகத்துக்கு மைய
நூலாக ஆனதாக சொல்லப்படும் வருடத்திலிருந்து 60 வருடங்கள் கழித்துதான்
குரானை பற்றிய குறிப்பே வருகிறது. இஸ்ரேலின் Dome of the Rock இல்
எழுதப்பட்டிருக்கும் குரான் வசனமே 691இல்தான் எழுதப்பட்டிருக்கிறது.
அதுவும் குரான் வசனமாக இருக்க வேண்டிய தேவையும் இல்லை. ஸ்பென்ஸர்
கூறுகிறார்.

இந்த குரான் வசனமே (dome of rock கல்வெட்டு) அரபு ராணுவம் தங்கள் அருகாமை
நாடுகளை குரானில் அடிப்படையில் உந்தப்பட்டு ஆக்கிரமிக்க கிளம்பி 60
ஆண்டுகளுக்கு பின்னர் எழுதப்படுகிறது. இதுவே முதல் வரலாற்று ரீதியான
குரான் வசன கல்வெட்டு. இதுவும் குரான் வசனமும் குரான் வசனமற்ற கவிதையும்
ஒன்றோடு ஒன்று கலந்து எழுதப்பட்டுள்ளது. குரான் வசனத்தையும் முழு
குரானிலிருந்து அங்கங்கிருந்து எடுக்கப்பட்டு சேர்க்கப்பட்டது போல
இருக்கிறது. இது ஏற்கெனவே உருவாக்கப்பட்ட குரானிலிருந்து எடுக்கப்பட்ட
வசனமே அல்ல என்று சில ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அதாவது dome of rock
கல்வெட்டு வசனங்களும், குரானும் அவற்றுக்கு முந்தைய கவிதைகளிலிருந்து
எடுக்கப்பட்டு சேர்க்கப்பட்டிருக்கின்றன என்று கருதுகிறார்கள். வெவ்வேறு
மூலங்களிலிருந்து எடுக்கப்பட்டு சேர்க்கப்பட்டிருக்கின்றன இரண்டுமே என்று
கருதுகிறார்கள்.

முகம்மதுவை பற்றிய அவர் கால செய்தி என்று சொல்லக்கூடிய மூன்றாவது பிரிவு
குரான் புத்தகம். அதுவும் முஸ்லீமல்லாதவர்களுக்கு அதிர்ச்சி
அளிக்கக்கூடியதாகவே இருக்கிறது. ஸ்பென்ஸர் எழுதுகிறார்.

"முகம்மது என்ற பெயர் குரானில் நான்கே முறைகள்தான் வருகிறது. அதில்
மூன்று இடங்களில் அவரது பெயராக இல்லாமல், "புகழுக்குரியவர்" அல்லது
தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற பொருளிலேயே வருகிறது. இதற்கு மாறாக, மோஸஸின்
பெயர் 136 முறை குறிப்பிடப்படுகிறது. ஆப்ரஹாமின் பெயர் 79 முறை
குறிப்பிடப்படுகிறது. எகிப்து பரோ 74 தடவை குறிப்பிடப்படுகிறார்.
அல்லாஹ்வின் தூதர் என்ற rasul Allah முறையில் வெவ்வேறு வடிவங்களில் 300
தடவை குறிப்பிடப்படுகிறது. இறைதூதர் nabi என்ற வகையில் 43 முறை
குறிப்பிடப்படுகிறது. இவை அனைத்தும் 7 ஆம் நூற்றாண்டில் அரபியாவில்
தோன்றிய முகம்மது நபியை பற்றிய குறிப்பா? இருக்கலாம். குரானை
படிப்பவர்கள் அப்படித்தான் அதனை புரிந்துகொண்டிருக்கிறார்கள். அப்படியே
இருந்தாலும், அதன் மூலம் அவருக்கு நேர்ந்த நிகழ்வுகளையோ சூழ்நிலைகளையோ
அவரது வாழ்க்கை பற்றியோ அறிய முடியாது.

குரான் முழுவதும், அவர் தன்னைத்தானே அல்லாஹ்வின் தூதர் என்று பல முறை
கூறிக்கொள்வதையும், அவரை கீழ்ப்படிய வேண்டும் என்று மக்களிடம்
கூறுவதையும் தவிர, அவரை பற்றி ஒன்றுமே இல்லை. மூன்று நான்கு முறை அவரது
பெயரை குறிப்பிட்டாலும், அவரது வாழ்க்கை பற்றி ஒன்றுமே இல்லை.

குரான் முகம்மதை பெயர் குறித்து கூறுவதை வைத்து அவ்வளவுதான் கூறலாம்.
அல்லாஹ்வின் தூதர் என்ற குறிப்புகளில், தூதரின் பெயர் குறிப்பிடவில்லை.
அது மட்டுமல்ல, அந்த தூதரின் செயல்களும் குறிப்பிடவில்லை. ஆகவே
குரானிலிருந்து முகம்மதுவின் வாழ்க்கை வரலாற்றை பற்றி ஒன்றுமே
அறிந்துகொள்ள முடியாது. குரானின் வசனத்தை மட்டுமே வைத்து பார்த்தால்,
இந்த "அல்லாஹ்வின் இறைதூதர்" என்பது முகம்மதைத்தான் குறிக்கிறது என்றும்
கூறவியலாது"

என்கிறார்.

குரானில் முகம்மதுவை பற்றி எந்த விவரணையும் இல்லை. குரானின் ஆரம்பகால
வரலாற்றை மிகவும் ஆழமாக ஸ்பென்ஸர் ஆராய்கிறார். இஸ்லாமிய நூல்களிலேயே,
முகம்மதின் மறைவுக்கு வெகுகாலத்துக்கு பின்னரே குரான் தொகுக்கப்பட்டது
என்று ஒத்துகொள்கின்றன. அதுவும் நினைவிலிருந்து பலர் சொன்னதை வைத்து
அவற்றை சேர்த்துத்தான் தொகுத்தவர்கள் குரானை உருவாக்கினார்கள் என்று
கூறுகிறது. அதற்கு மேலும், அவர்கள் எந்த வசனத்தை சேர்த்தார்கள் எந்த
வசனத்தை விலக்கினார்கள் என்பதற்கு அரசியல், ராணுவ காரணங்கள் காரணமாக
வெவ்வேறு தொகுப்பாளர்களால் உருவாக்கப்பட்ட போட்டி குரான்களும் இருந்தன
என்று இந்த நூல்களே கூறுகின்றன.

இதேதான் ஹதீஸ் தொகுப்புக்கும். குரான் ஏறத்தாழ முகம்மதுவை பற்றி மவுனமாக
இருந்தாலும், ஹதீஸ் (என்னும் மிகவும் பிற்காலத்தில் எழுதப்பட்ட இரண்டாம்
கட்ட குரான் விளக்க உரை, முகம்மதுவை பற்றி மிகவும் விலாவாரியாக
விளக்குகிறது. அதுவும் மிகவும் நுண்ணிய விளக்கங்களோடு இருக்கிறது.
இஸ்லாமில் நம்பிக்கையில்லாத எனக்கு பெரும்பாலான இந்த விவரணைகள், வெறும்
கட்டுக்கதைகள் என்றுதான் தோன்றுகின்றன. ஸ்பென்ஸர் இந்த ஹதீஸ்கள் எவ்வாறு
உருவாயின என்று விளக்கும்போது, என்னுடைய அவநம்பிக்கை உறுதிப்படுகிறது. பல
நூற்றாண்டுகள் கழித்து, போட்டி பிரிவுகளால் தொகுக்கப்பட்ட இந்த ஹதீஸ்கள்
இந்த வாய்மொழிச்செய்திகள் யாரிடமிருந்து யார் சொல்லி வந்தது என்ற வழிமுறை
வேறு சொல்கின்றன. இதனை இஸ்னாத்(isnad) என்று அழைக்கிறார்கள். ஒவ்வொரு
இஸ்நாதும் அந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதுதான் என்று நிரூபிக்க
எழுதுகிறார்கள். அந்த இஸ்நாத் ஆதாரப்பூர்வமானதுதான் அல்லது சரியானதுதான்
என்று யார் நிரூபிப்பார்கள்?

வெவ்வேறு போட்டி பிரிவினர் தங்கள் நிலைப்பாட்டை
நியாயப்படுத்திக்கொள்வதற்காக ஹதீஸ்களை உருவாக்கிகொண்டதால், இந்த ஹதீஸ்கள்
எல்லாம் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டவையாக இருக்கின்றன.

8ஆம் நூற்றாண்டில் இறுதியில் அப்பாஸித் வமிச ஆட்சியாளர்கள் இந்த ஹதீஸ்களை
தொகுக்கவும், அவற்றை ஆவணப்படுத்தவும் முயன்றார்கள். இவ்வாறு தொகுத்ததால்,
முகம்மது எதனை அங்கீகரித்தார், எதனை அங்கீகரிக்கவில்லை, எதனை
ஆணையிட்டார், எதனை தடுத்தார் என்பதற்கான செய்தி தொகுப்பை ஏராளமானதாக
ஆக்கினார்கள்… இன்னும் அடுத்த நூற்றாண்டில் (9ஆம் நூற்றாண்டில்)தான் ஆறு
முக்கியமான ஹதீஸ் தொகுப்புகள் தொகுக்கப்படுகின்றன. அதாவது அனைத்துமே
முகம்மது இறந்து, சுமார் 200 வருடங்களுக்கு பிறகு.



Ignaz Goldziher இக்னாஸ் கோல்ஜிஹெர் என்ற ஹதீஸ் வரலாற்றாராய்ச்சியாளர்
குறிப்பிடுகிறார், "கட்டுக்கடங்காமல் உருவாகும் போலி ஹதீஸ்களை தடுக்க
நேர்மையானவர்கள் செய்த முயற்சிதான் இலக்கியத்தின் வரலாற்றிலேயே மிகவும்
வினோதமான நிகழ்வு. நல்ல நோக்கத்துடன், போலி ஹதீஸ்களை எதிர்கொள்ள போலி
ஹதீஸ்கள் உருவாக்கப்பட்டன. புதிய ஹதீஸ்களை உருவாக்கி அதன் மூலம் போலி
ஹதீஸ்களை உருவாக்குபவர்களை கடுமையான வார்த்தைகளில் இஸ்லாமிய இறைதூதரே
திட்டும் ஹதீஸ்கள் உருவாக்கப்பட்டன"

ஒரு ஹதீஸ் போலியாக உருவாக்க முடியுமென்றால், அதன் வாய்வழி தொடர்ச்சியும்
(யார் மூலமாக யார் கேட்டு யாரிடம் சொன்னது என்ற வழி) போலியாக உருவாக்க
முடியும். எந்த அளவுக்கு ஹதீஸின் உள்ளுறை (matn)போலியாக உருவாக்கப்பட்டதோ
அதே வேகத்தில் அதே துல்லியமாக வழிமுறை (isnad) தொடர்ச்சியும் போலியாக
உருவாக்கப்பட்டது."

ஆமாம் போலி ஹதீஸ்கள்.

அதே போல இபின் இஷாக் அவர்களால் எழுதப்பட்ட முகம்மதின் வாழ்க்கை வரலாறு
நம்பகமானது என்று எந்த கேள்வியும் கேட்காமல் ஏற்றுகொள்பவர் மட்டுமே
ஏற்றுகொள்ள முடியும். அல்லது எதனையாவது ஆதாரப்பூர்வமாக ஏற்றுகொள்ள
வேண்டும் என்று தவிக்கும் ஆய்வாளர்கள் மட்டுமே இபின் இஷாக்கை
ஆதாரப்பூர்வமான வாழ்க்கை வரலாறாக எடுத்துகொள்ள முடியும். ஏனெனில் அந்த
காலத்தின் வரலாறு பற்றிய ஆதாரப்பூர்வமான பதிப்பு வேறெந்த இடத்திலும்
இல்லை. ஸ்பென்ஸர் கூறுகிறார்

முகம்மது இபின் இஷாக் இபின் யாஸர் என்ற முழு பெயர் கொண்ட இபின் இஷாக் ஒரு
தீவிர மத நம்பிக்கை கொண்ட முஸ்லீம். அவர் எழுதிய வாழ்க்கை வரலாறே
இன்றைக்கு "வரலாற்றின் முழு ஒளியும் வீசும் முகம்மதின் வாழ்க்கை வரலாறு"
என்று அறியப்படுகிறது. இருப்பினும் இபின் இஷாக் முகம்மதோடு சமகாலத்தில்
வாழ்ந்தவர் அல்ல. முகம்மது மறைந்ததாக சொல்லப்படும் வருடம் 632. இபின்
இஷாக் மறைந்த வருடம் 773. ஆகவே அவர் எழுதிய வாழ்க்கை வரலாறு முகம்மதின்
மறைவுக்கு சுமார் 100 வருடங்களுக்கு பின்னரே வருகிறது. மேலும் இபின்
இஷாக் எழுதிய ஸிரத் ரசூல் அல்லா என்ற புத்தகம் அதன் ஒரிஜினல் படிவத்தில்
கிடைக்கப்படவில்லை. அதுவும் அவருக்கு பின்னர் வந்த மற்றொரு இஸ்லாமிய
அறிஞரான இபின் ஹிஷாம் என்பவரால் சுருக்கப்பட்டு வெளியிடப்பட்ட
புத்தகத்தில் மேற்கோள் காட்டப்படுகிறது. இபின் ஹிஷாம் மறைந்த வருடம்
834..

இறைவன் அளிக்கும் அன்பை பற்றி போதித்த அமைதியான போதகர் அல்ல இபின் இஷாக்
காட்டும் முகம்மது. இபின் இஷாக்கின் முகம்மது, தனது எதிரிகளை
தீர்த்துக்கட்ட ஆளை அனுப்பிய ஒரு போர்ப்படை தளபதி. ஏராளமான போர்களை
நடத்திய போர்ப்படை தளபதி. இபின் இஷாக் வரையும் முகம்மதின் சித்திரம்
பாராட்டத்தகுந்ததல்ல என்று வரலாற்றாய்வாளர் டேவிட் மார்கோலியோத்
கூறுகிறார்…

..இபின் ஹிஷாம் தான் எழுதிய சுருக்கப்பட்ட வரலாறு சுத்திகரிக்கப்பட்டது
என்று கூறுகிறார். மூலத்தில் ஏராளமான அவமானப்பட தகுந்த விஷயங்கள்
இருக்கின்றன. அவை பலரை மனகஷ்டப்படுத்தும் என்று கூறுகிறார். , "things
which it is disgraceful to discuss; matters which would distress
certain people…."

அதாவது, எந்த வரலாற்றை அடிப்படையாக வைத்து பின்னர் வந்த வாழ்க்கை
வரலாறுகள் எழுதப்பட்டனவோ அந்த வாழ்க்கை வரலாறே முகம்மதின் இறப்புக்கு
நூறு வருடங்களுக்குபின்னரே எழுதப்பட்டது. பத்திரிக்கைகளோ, ஆவணங்களோ
இல்லாத ஒரு காலத்தில் எழுதப்பட்டது. நடந்திருக்கக்கூடிய விஷயங்களை
நேருக்கு நேராக பார்த்தவர்கள் வெகுகாலத்துக்கு முன்னரே இறந்துவிட்டபிறகு
இந்த வரலாறு எழுதப்படுகிறது. அந்த வரலாறும் போய், அந்த வரலாற்றை படித்த
ஒருவர் அதிலிருந்து சுருக்கி, அமங்கலமான விஷயங்களை எல்லாம் நீக்கி எழுதிய
வரலாறுதான் முகம்மதின் ஆதாரப்பூர்வமான வரலாறாக சொல்லப்படுகிறது. அந்த
வரலாற்றாசிரியரே அமங்கலமான பல விஷயங்களை விட்டுவிட்டதாக சொல்கிறார்.

புத்தகம்

முகம்மது இருந்தாரா? இறைவனால் அருளப்படுகிறதாக சொல்லப்படுகிற புத்தகம்,
அதன் ஆரம்பத்திலிருந்து மாறாததாக சொல்லப்படுகிற புத்தகத்துக்கான ஆதாரத்தை
இஸ்லாம் தர முடியவில்லை என்று ஸ்பென்ஸர் குறிக்கிறார்.

முகம்மது இருந்திருக்கக்கூடிய, அல்லது இல்லாமல் இருந்திருக்கக்கூடிய
சாத்தியங்களை ஆராயும் இந்த புத்தகம், பல இலக்கிய தத்துவ தடயங்களை
இருபுறமும் அளிக்கிறது. இந்த புத்தகத்தை படிப்பவர்கள் "அகழ்வாராய்ச்சி
தடயங்களை பற்றி என்ன சொல்கிறீர்கள்" என்று கேட்கலாம். துரதிர்ஷ்ட வசமாக
ஸ்பென்ஸர் இந்த வாதத்தை எதிர்கொள்ளவில்லை. அதற்கும் முக்கிய காரணம்,
தடயங்கள் ஏதும் இல்லாமையே. சவுதி அரசாங்கமும்( ஜெருசலத்தில் உள்ள
டெம்பிள் மவுண்ட் மசூதியை நிர்வகிக்கும் வக்ப் நிர்வாகமும்)
அகழ்வாராய்வுக்கு உரிய தடயங்களை அழிப்பதில் முன்னணியில் இருக்கின்றன.
இஸ்லாமின் ஆரம்ப காலத்துக்கு தடயங்களை அளிக்கக்கூடிய எல்லா விஷயங்களையும்
வேண்டுமென்றே அழிக்கின்றன. முகம்மதுக்கும் அவரது ஆரம்ப கால
தோழர்களுக்கும் தொடர்புடையதாக கருதப்பட்ட பல இடங்களை சவுதி அரசாங்கம்
அழித்து அவற்றின் மீது பல கட்டிடங்களை எழுப்பியுள்ளது. ஆகவே இஸ்லாமின்
ஆரம்ப காலத்தை பற்றிய எந்த அகழ்வாராயச்சிக்கும் இன்று முயற்சி எடுக்க
முடியாத சூழ்நிலை. மெக்காவின் வரலாற்றை வேண்டுமென்றே சவுதிகள்
அழிப்பதற்கு காரணம், இஸ்லாமின் ஆரம்ப காலத்தை பற்றி அகழ்வாராய்ச்சிகள்
நடந்தால் அவை இஸ்லாமின் வரலாறாக சொல்லப்பட்டு வருவது பொய் என்று
தெரியவரலாம் என்ற அச்சத்தால் இருக்கலாம் என்று கருத இடமிருக்கிறது. இந்த
விஷயம் இந்த புத்தகத்துக்கு முக்கிய விஷயம் இல்லை என்றாலும், இந்த
புத்தகத்தின் வாதத்தை இன்னும் வலுவாக ஆக்கியிருக்கும்.

முகம்மது வரலாற்றில் இருந்தவரா? இந்த புத்தகம் பொதுமக்களுக்காக
பொதுமக்கள் மொழியில் எழுதப்பட்டுள்ள புத்தகம். இன்னொரு வகையில்
சொல்லப்போனால், ஸ்பென்ஸர் தானாக எந்த ஆராய்ச்சியையும் செய்ததாக
சொல்லிக்கொள்ளவில்லை. அவர் செய்திருப்பதெல்லாம், அதுவும் மிகவும்
திறமையான முறையில், கடந்த நூறு ஆண்டுகளில் பல ஆராய்ச்சியாளர்கள் செய்த
ஆராய்ச்சிகளையும் கண்டுபிடிப்புகளையும் ஒன்று சேர்த்து
கொடுத்திருப்பதுதான். Günter Lüling, David Margoliouth, Patricia Crone
ஆகியோர் எழுதிய ஆராய்ச்சிகள் இருக்கின்றன. மேலும் Christoph Luxenberg
என்ற புகழ்பெற்ற ஆராய்ச்சியாளர், குரானை அரபி மொழி மூலமாக அன்றி, அந்த
காலத்தில் புழக்கத்திலிருந்த சிரியாக் மொழி வாசிப்பில் அதனை படித்து
அதற்கு இருக்கக்கூடிய வேறு பொருட்களை கொண்டுவந்தவர். அவ்வாறு ஆராய்ச்சி
செய்வது பழமையில் ஊறிய இஸ்லாமியர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம் என்ற
அச்சத்தால் புனைபெயரில் புத்தகம் பதிப்பித்தவர். இவை அனைத்து நூல்களையும்
ஒருங்கிணைத்து, இந்த ஆய்வு முடிவுகளை இணைத்து, இந்த தடயங்கள் மூலம்,
தற்போதைக்கு இருக்கும் கொள்கை(அதாவது முகம்மது வரலாற்றில் இருந்தவர் என்ற
கொள்கை)க்கு ஆதாரம் ஏதுமில்லை என்றும் அது உண்மையாக இருக்க மிகக்குறைந்த
சாத்தியங்களே உள்ளன என்று கொண்டுவருகிறார். இதுவரை அறியப்பட்ட ஆராய்ச்சி
முடிவுகள், இஸ்லாம் என்ற மதம் மெல்ல மெல்ல முந்தைய யூத கிறிஸ்துவ
நம்பிக்கைகள் அடிப்படை மேல் உருவாக்கப்பட்ட மதம். இந்த புதிய மதத்துக்கு
அதிகாரப்பூர்வ முத்திரை கொடுக்க அதன் மீது ஒரு இறைதூதர் இருந்ததார் இவை
அவர் கூறியவை என்று பின்னால் உருவாக்கப்பட்ட கட்டுக்கதை.
இந்த புத்தகத்தின் நூறு பக்கங்களுக்கு பிறகு ஸ்பென்ஸர் இந்த தேற்றத்தை
தெளிவாக கூறுகிறார்.

"முகம்மது ஒரு அரபிய தூதுவர், மெக்காவில் பிறந்தார், அரபி மொழி பேசி
அல்லாஹ்வின் செய்தியை அரபுகளுக்கும் பிறகு உலகத்தாருக்கும்
கொண்டுவந்தார்." இந்த வரியின் முஸ்லீமல்லாதவர்களும் பொதுவான உண்மையாக
எடுத்துகொள்கிறார்கள். இருப்பினும் நுணுக்கி பார்த்தால், ஒவ்வொரு
விஷயமும் கரைகின்றன. அந்த காலத்திய வரலாற்று ஆவணங்கள் எதிலுமே முகம்மது
என்ற ஒரு அரபிய தூதுவர் மெக்கா அருகாமையில் இருந்தார் என்பதற்கோ அவர்
உலகத்துக்கான எதாவது செய்தியை சொன்னார் என்பதற்கோ ஆதாரம் இல்லை. ஒருவேளை
முகம்மது என்ற ஒருவர் இருந்திருந்தாலும், மெக்காவில் இருந்தார் என்பதற்கோ
அவர் இஸ்லாமில் கூறப்படும் விஷயங்களை போதித்தார் என்பதற்கோ ஆதாரம் இல்லை.
அவர் அப்படியே இருந்திருந்தாலும், அவரது வாழ்க்கை வரலாறும், அவர்
கூறியதாக சொல்லப்படும் புனித புத்தகமும் அவரது மறைவு என்று கூறப்படும்
வருடத்துக்கு பிறகு பல நூற்றாண்டுகள் கழித்தே உருவாக்கப்படுகின்றன.

புத்தகத்தின் இறுதிப்பகுதியில் ஸ்பென்ஸர் மூல கருத்தை விட்டுவிட்டு
குரான் அரபி மொழியிலிருந்து எடுக்கப்பட்டதா என்ற ஆராய்ச்சிக்கு போகிறார்.
ஆனால், இவ்வறு செல்வதற்கான காரணம் வெகுவிரைவிலேயே தெரியவருகிறது.
குரானின் பல முக்கியமான பகுதிகள் சிரியாக் மொழியில் எழுதப்பட்ட யூத,
கிறிஸ்துவ நூல்களிலிருந்து ஏறத்தாழ காப்பி அடிக்கப்பட்டிருக்கின்றன
என்பதற்கான ஆதாரங்களை முன் வைக்கிறார். இஸ்லாமின் வேர்கள் அதற்கு
முன்னால் இருந்த மத புத்தகங்களிலிருந்து எடுத்தாளப்பட்டவை.
(அல்லாஹ்விடமிருந்து தனித்துவமாகவும் முழுமையாகவும் பெறப்பட்டதாக
கூறப்படும் நம்பிக்கைக்கு மாற்றாக). அப்படியானால், "இறைதூதர்" என்ற
கதையும் கடன் வாங்கப்பட்ட ஒரு கதையா?

ஏற்கெனவே இருக்கும் ஒன்றை பொய்யென நிரூபிப்பதன் பிரச்னையே அது மிகவும்
உழைப்பை உறிஞ்சக்கூடியது, ஏராளமான நுண்ணிய தகவல்களை தேடுவது என்பதுதான்.
எந்த மாதிரியான பொதுமைப்படுத்தல்களாலும், அதன் இருப்பை மிக எளிதில்
உதாசீனம் செய்துவிடவியலாது. ஒரு நூறு பெட்டிகள் உங்கள் வீட்டில்
இருந்தால், அவற்றில் ஒரு வாதாங்கொட்டை எதுவும் இல்லை என்று நிரூபிக்க
வேண்டுமானால், ஒவ்வொரு பெட்டியையும் திறந்து அவற்றில் வாதாங்கொட்டை இல்லை
என்றுதான் நிரூபிக்க வேண்டும். அந்த எதிர்பார்ப்புக்கு இணங்க, ஸ்பென்ஸர்
எத்தனை வரலாற்று ஆவணங்களை திறக்க முடியுமோ அத்தனை ஆவணங்களையும்
ஆராய்கிறார். இவை அனைத்தையும் புத்தகத்தில் எழுதுவது ஒரு பொதுமக்கள்
படிக்கக்கூடிய புத்தகத்துக்கு மிகவும் பெரியதாக இருக்கும். இருந்தாலும்,
ஒவ்வொரு வரலாற்று தடயத்தையும் மேலும் ஆராய விரும்பும் வாசகர்களுக்கு
உதவியாக மிகவும் நீண்ட ஆவண இணைப்பை வழங்கியிருக்கிறார்.

தடயங்களில் தனக்கு தேவையானதை மட்டுமே எடுத்துகொண்டு ஸ்பென்ஸர் தனது
புத்தகத்தை எழுதியிருக்கிறாரா? அதாவது முகம்மது என்பவரைப் பற்றிய ஆரம்ப
கால இஸ்லாமின் வரலாற்று ஆதாரங்களில் அவர் இருந்தாரா என்பதற்கு சந்தேகம்
வரக்கூடியவற்றை மட்டுமே எடுத்துகொண்டு, அவர் இருந்திருக்கிறார்
என்பதற்கான வரலாற்று ஆதாரங்களை உதாசீனம் செய்திருக்கிறாரா? நிபுணன்
அல்லாத என்னைப் போன்ற ஒருவரால் அதனை நியாயமாக அணுக முடியாது. ஆனால், இந்த
புத்தகத்தில், இஸ்லாம் தோற்றுவிக்கப்பட்டதாக சொல்லப்படும் ஆரம்ப
காலத்திலிருந்து, அதற்கு பின் ஒரு நூற்றாண்டுகளான அனைத்து ஆவணங்களையும்,
உதவக்கூடிய உதவாத அனைத்து வரலாற்று ஆவணங்களையும் அவர் முழுமையாக
கொடுத்திருக்கிறார். விவாதமும், வன்முறையும் எதிர்கொள்ளக்கூடிய ஒரு
துறையில் இந்த புத்தகம், ஒரு அச்சமற்ற, நியாயமான பல்கலைக்கழக ஆய்வாளரின்
பார்வையிலிருந்து இஸ்லாமை அணுகுகிறது. இந்த புத்தகத்துக்குப் பின்னால்,
இந்த ஆவணங்களை எதிர்கொள்ளாமல், இஸ்லாமின் தோற்றத்தை பற்றி தனக்குத்தானே
கொடுத்துக்கொள்ளும் அங்கீகாரத்தை கேள்வி கேட்காமல், அப்படியே ஒப்புகொண்டு
போகும் எந்த ஒரு ஆய்வாளரையும் சந்தேகத்துடனேயே பார்க்கும்படி வைக்கிறது.

ஐரோப்பிய, அமெரிக்க மனதுக்கு, இருண்ட காலங்கள் Dark Ages எனக்கூறப்படும்
காலம் ஏறத்தாழ முழுமையாக இருண்டதாக இருக்கிறது. கிபி 600களில் நடந்த
எதனையும் அறுதியுடன் கூறுவது மிகவும் மெத்த படித்த அறிஞர்களுக்கு கூட
கடினமானதாக இருக்கிறது. இந்த இருண்டகாலங்களை பற்றிய இலக்கிய,
அகழ்வாராய்ச்சி மற்றும் கலாச்சார நிகழ்வுகள் மிகவும் அரிதாகவே
கிடைக்கின்றன. ஆனால், இந்த கால கட்டத்தில்தான் முகம்மதின் கதையும்
இஸ்லாமின் தோற்றமும் நடக்கிறது. ஆகவே, இந்த காலத்தில் தடயங்கள்
கிடைக்காமல் இருப்பது எதிர்பார்க்கக்கூடியதுதான் என்று வாதிட
இடமிருக்கிறது.

இருப்பினும், இஸ்லாமை பற்றிய வரலாற்றை ஆராயப்புகுந்தால், ஒரு சிக்கலான
நிலையையே எட்ட வேண்டியதிருக்கிறது. முகம்மது இருந்ததாக கூறப்படும்
காலத்தை நெருங்க நெருங்க, ஆதாரங்களும் மூலங்களும் ஆவணங்களும் அரிதாகி
விடுகிறது. முகம்மதின் இறப்பு முடிந்து நூறு ஆண்டுகளுக்கு பிறகுதான்
நிகழ்ச்சிகள் ஆவணப்படுத்தப்படுகின்றன. அதற்கு முன்னால், செல்வது
கடினமாகிவிடுகிறது. திரை இறங்கிவிடுகிறது. அந்த திரையை கிழித்து அதன்
ஆரம்பத்தை பார்க்க முடிவதில்லை. ஆகவே, நம்மால் முகம்மது ஒரு உண்மையான
மனிதரா? அல்லது உருவாக்கப்பட்ட பிரமையா, அல்லது வசதியாக உருவாக்கப்பட்ட
கட்டுக்கதையா என்று சொல்லமுடிவதில்லை.

இன்றைய நவீன அரசியல் சூழ்நிலையில், முகம்மது வரலாற்றில்
இருந்திருக்கிறாரா? Did Muhammad Exist? என்ற தலைப்பே ஒரு சவால்தான்.
இந்த புத்தகத்தை எழுதிய ஆசிரியருக்கு, இந்த மாதிரி தலைப்பை
வைத்ததற்காகவே, எதிர்ப்பு, வன்முறை, ஒதுக்கல், பத்வாக்கள் ஆகியவை
வரக்கூடும் என்பதால், உண்மையில், "முகம்மது வரலாற்றில்
இருந்திருக்கிறாரா? என்ற தலைப்பில் புத்தகம் எழுதலாமா?" என்றுதான் இந்த
புத்தகத்துக்கு தலைப்பு வைக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த தலைப்பு
கேள்விக்கு விடை இன்றைய அரசியலில் "கூடாது" என்றுதான் இருக்கும். ஆகவே,
"முகம்மது வரலாற்றில் இருந்திருக்கிறாரா?" என்ற கேள்விக்கும் விடை
"இல்லை" என்றுதான் இருக்கும். ஏனெனில், முகம்மது வரலாற்றில் நிச்சயம்
இருந்திருந்தால், அவரது இருப்பு ஆதாரப்பூர்வமாக
ஆவணப்படுத்தப்பட்டிருந்தால், அப்படிப்பட்ட கேள்வியை கேட்பதற்கு எந்த
விதமான அச்சுருத்தலும் நிச்சயம் இருக்காது. மேலும், இந்த புத்தக
ஆசிரியர், முகம்மதின் வரலாற்று இருப்பை சந்தேகப்பட்டிருப்பதாலும், அவரது
முடிவை எளிதில் பொய்யென நிரூபிக்க முடிந்திருந்தால், இந்த கேள்வியும்
உடனே உதாசீனம் செய்யப்பட்டு மறக்கப்பட்டிருக்கும். ஆகவே, இந்த புத்தகம்
விவாதத்துக்குரியதாக இருப்பதாலும், இது சில நாடுகளில் தடை
செய்யப்பட்டிருப்பதாலும், இந்த புத்தகத்தின் வாதங்களில் சத்திருக்கிறது
என்ற முடிவுக்கே வர வேண்டியுள்ளது.

இயேசு வரலாற்றில் இருந்தாரா என்பதை பற்றி ஆய்வாளர்கள் ஆராயும்போது அது
விவாதத்த்குரியதாக இல்லை. விவிலியத்தில் இருக்கும் நிகழ்ச்சிகளின்
அடிப்படையில் அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும்போது அது
விவாதத்துக்குரியதாக இல்லை. விவிலியத்தில் இருக்கும் நிகழ்வுகள் நடக்கவே
இல்லை என்று இந்த ஆராய்ச்சியாளர்கள் சொல்லும்போது, ஒரு சில
கிறிஸ்துவர்கள் அப்படிப்பட்ட ஆய்வு முடிவுகளை வருத்தத்துடன்
பார்த்தாலும், ஆய்வாளர்கள் மீது கொலை மிரட்டல் விடப்படுவதில்லை.
கிறிஸ்துவம் தனக்கு எதிராக வைக்கப்பட்ட விமர்சனங்களை தாண்டி நிற்கிறது.
அது தன் செய்தி தரும் வலிமையால் நிற்கிறது. அதன் வரலாற்று தகவல்களால்
நிற்கவில்லை. அதே போல இஸ்லாமும் இவற்றை எதிர்கொள்ளும் என்று
எதிர்பார்க்கலாம்.
Did Muhammad Exist?
by Robert Spencer
ISI Books, April 2012
$27.95

ஆரம்பகால கிறிஸ்தவத்தில் மற்றும் இஸ்லாமில் "வாள்" - ஓர் அறிமுகம்

Introduction to the Sword in Early Christianity and Islam
ஆசிரியர்: ஜேம்ஸ் அர்லண்டசன், Ph.D.

உலகளாவிய ஜிஹாத் (புனிதப்போர்) மற்றும் மேற்கத்திய நாடுகள் மேலான
தாக்குதல்கள் நடைபெற்ற வண்ணமே உள்ளன, இதற்கு முடிவு என ஒன்று இருப்பதாக
தெரியவில்லை. இப்படிப்பட்ட இக்கட்டாண சூழ்நிலைகளில் "நம்முடைய
சரித்திரங்களையும், உலக சரித்திரத்தையும் நாம் தெளிவாக புரிந்துக்கொள்ள
வேண்டும்" என்பது தான் அதி முக்கிய தேவையாக உள்ளது. இந்த தெளிவை பெற
வேண்டுமென்றால் அதற்கு ஒரு வழி உண்டு அதாவது "நாம் பின்னுக்கு திரும்பி
பார்க்கவேண்டும்" என்பதாகும், அதாவது சரித்திரத்தை
அறிந்துக்கொள்ளவேண்டும்.

இந்த வரலாற்று நிகழ்வுகளும் அவைகளுக்கான விளக்கங்களும் ஏறத்தாழ ஒரே தன்மை
உடையவைகளாக காணப்படுகின்றன, மற்றும் ஆங்காங்கே சில வித்தியாசங்களும்
காணப்படுகின்றன. இந்த ஜிஹாதுக்கான விதைகள் ஆதி காலத்தில் இருந்தே
விதைக்கப்பட்டிருந்தன. இவ்வாறு விதைக்கப்பட்ட விஷங்களே இன்று துவேஷங்களாக
வளர்ந்துள்ளன. ஜிஹாத்துக்கு எதிரான இராணுவ‌ பதிலடி நடவடிக்கைகளும் இன்று
வளர்ந்து வந்துள்ளன. வரலாறு நமக்கு சொல்லித் தரும் பாடங்களை நாம்
கற்றுக்கொள்ள மறுத்தால், நாம் எந்த தவறுகளை வரலாற்றில் செய்து இருந்தோமோ
அவற்றையே திரும்ப செய்கிற துர்பாக்கிய நிலையில் நாம் இன்று
தள்ளப்படுவோம். ஒரு வேளை வரலாறு வன்முறை நிறைந்ததாக காணப்பட்டாலும், அந்த
வன்முறையிலிருந்து நம்மை சீர்திருத்திக்கொண்டு, நாம் வன்முறையில்லாமல்
வாழ முயற்சி எடுக்கலாம் அல்லவா?

முதல் மூன்று நூற்றாண்டுகளில் கிறிஸ்தவம் வாளை எடுத்து போர் தொடுக்கவும்
இல்லை மற்றும் கிறிஸ்தவ சபை வாள் எடுப்பதை அங்கீகரிக்கவும் இல்லை [1],
மேலும் இதனை கொள்கையாக ஏற்றுக்கொள்ளவும் இல்லை. அதன் பின்னர்
கிறிஸ்தவர்களாக மாறிய ரோம ஏகாதிபத்திய சக்கரவர்த்திகளின் காலத்தில்
இக்கொள்கை மாறியது. இதன் பின் வந்த திருச்சபை தன்னுடைய உண்மையான
வழியிலிருந்து விலகிவிட்டதா? அல்லது இந்த புதிய கொள்கையை பின்பற்ற
ஆரம்பித்ததா?

சுமார் 1400 ஆண்டுகளாக அன்று முதல் இன்று வரை இஸ்லாம் வாளை சுழற்றியே
வந்துள்ளது. வாளை பயன்படுத்தவேண்டும் என்ற இந்த கொள்கை இஸ்லாமுக்கு
எங்கேயிருந்து கிடைத்தது? மெய்யான பாதையில் இருந்து இஸ்லாம் விலகியதா?
அல்லது இஸ்லாமை வழி நடத்துச் சென்ற தலைவர்கள் இவ்வாள் சுழற்றும் கொள்கையை
பின்பற்றினார்களா? ஒரு மார்க்கம் தனது மைய கொள்கைகளில் இருந்து வழி
விலகுகிறதா இல்லையா என்பதை நாம் எப்படி உறுதி செய்துகொள்வது?

இயேசு கிறிஸ்துவும் முஹம்மதுவும் தங்களது மார்க்கங்களுக்கான மரபியல்
கூறுகளை ஸ்தாபித்தனர், அடிப்படை கட்டளைகளை கொடுத்தனர். வன்முறை மற்றும்
வாளை பயன்படுத்துவதற்கு அவர்கள் கொடுத்த‌ கொள்கை விளக்கங்கள் என்ன?

இந்த தொடர் கட்டுரைகள், 600 வருட கால இடைவெளியை கொண்டுள்ள கிறிஸ்தவம்
மற்றும் இஸ்லாமின் ஆரம்ப புள்ளிகளையும் மற்றும் இதில் எழும்
கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையிலும் எழுதப்பட்டுள்ளது. இவ்விரண்டு
மார்க்கங்களை ஒப்பிட்டு இத்தொடர் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளது.

* தேவனுடைய ராஜ்யத்துக்கும் சீசருடைய ஆட்சிக்கும் இயேசு கிறிஸ்து
கொண்டிருந்த கொள்கை என்ன?
* இவ்விரண்டும் (ஆன்மீகம் மற்றும் அரசாங்கம்) தனித்தனியே வைத்து
நிர்வாகிக்கப்படவேண்டுமா?
* மரணம் மற்றும் "அரசாங்கத்திற்கு செலுத்தும் வரிகள்" பற்றி
இயேசுவின் கருத்து என்ன?
* புனித நகரமாகிய‌ எருசலேம் மற்றும் அதிலுள்ள தேவாலயம் குறித்தும்
அதன் அரசியல் ‍புவியியல் சார்ந்த முக்கியத்துவம் குறித்தும் இயேசுவின்
நிலைப்பாடு என்ன‌?
* ஒருவேளை மதரீதியான ஒரு கோட்பாட்டை புனித ஸ்தலமான எருசலேமில்
ஸ்தாபிக்க இயேசு முயன்று தோற்றாரா?
* இயேசு, ரோம இராணுவ அதிகாரியை சந்தித்த போது ரோம படைகளை குறித்து
இயேசு கொண்டிருந்த நிலைப்பாடு என்ன‌?
* நற்செய்தி நூல்களில் வாளைப்பற்றிய குறிப்புகள் உண்டா?
* ஒருவேளை இருந்திருந்தால் அதை உபயோகிக்கும் நிலைகள் பற்றி இயேசு
கூறுபவைகள் யாவை?
* நான் அமைதியை அல்ல, நான் பட்டயத்தை அனுப்பவே வந்தேன் என இயேசு
சொன்னதன் நோக்கம் என்ன‌?
* இயேசு அமைதியை உண்டாக்கும் ஒரு சமரசவாதியா?
* ஒரு நாள் உலகத்தில் சமாதானம் நிச்சயம் நிலவும் அப்போது பட்டயங்கள்
தேவைப்படாது என இயேசு நம்பினாரா?
* உலகம் ஒரு சமாதான இடமாக இருக்கவேண்டும் என்று இயேசு விரும்பினாரா?
மற்றும் இப்படி நடக்கும் என்று அவர் எதிர்ப்பார்த்தாரா?
* பரலோக இராஜ்ஜியம் மற்றும் சீசரின் இராஜ்ஜியம் பற்றி ஆதிதிருச்சபை
கொண்டிருந்த நிலைப்பாடு என்ன‌?
* ஆதி கிறிஸ்தவர்கள் பட்டயத்தை சுமந்து சென்றார்களா?
* அக்கால அரசாங்கங்கள் பட்டயம் வைத்திருக்க அனுமதி கொடுத்திருந்ததா?
ஆதி கிறிஸ்தவர்கள் அதை எதிர்த்து பிரச்சாரம் செய்தார்களா? இல்லையா?
* ஆதி கிறிஸ்தவர்கள் ஏன் அதிகம் துன்புறுத்தப்பட்டனர்?
* ஆதி கிறிஸ்தவர்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள 'தீவிரவாத குழுக்களை'
உருவாக்கிக்கொண்டார்களா?
* கிறிஸ்தவம் யூத மதத்தில் இருந்து வளர்த்தெடுக்கப்பட்டது என்பது
நாம் அறிந்ததே, இப்படி இருக்கும் போது, யூதர்களுக்கும் இயேசுவிற்கும்
இடையே உறவு எப்படி இருந்தது? மற்றும் யூதர்களுக்கும் ஆதிகால
கிறிஸ்தவர்களுக்கும் இடையே உறவு எப்படி இருந்தது?
* இயேசுவும் அவரது சீடர்களும் யூதர்களை துன்பப்படுத்தினார்களா?
"ஆன்டி-செமிடிக் (Anti-Semitic)" என்றுச் சொல்லக்கூடிய, யூத எதிர்ப்பு
குழுவாக இயேசுவும், அவரது சீடர்களும் செயல்பட்டார்களா?
* இயேசுவும் அவரது ஆரம்ப கால சீடர்களும் எவ்வாறு ரத்தம் சிந்தி
மரித்தனர்? அவர்கள் தங்களை தாக்கியவர்களை பட்டயங்களால் தாக்கவில்லையா?
* இன்றுள்ள கிறிஸ்தவர்களுக்கு வாள் அல்லது தற்கால ஆயுதங்கள்
வைத்துக்கொள்ள அனுமதியுண்டா?
* கிறிஸ்தவர்கள் தற்காப்புக்காக ஆயுதங்கள் வைத்திருக்கலாமா?
* தனிப்பட்ட கிறிஸ்தவர்களுக்கும் திருச்சபைக்கும் பட்டயம் குறித்ததான
கொள்கை முரண்கள் உள்ளனவா?
* இக்கால கட்டத்தில் யுத்தம் மற்றும் சமாதான காலங்களில்
திருச்சபையின் நிலைப்பாடு என்ன?
* இன்றைய சூழலிலும் திருச்சபையானது 'மறு கன்னத்தை' காண்பிக்கச்
சொல்லி அரசாங்கத்திற்கு அறிவுரை கூறுகின்றதா?
* காவல்துறை மற்றும் ராணுவத்தில் கிறிஸ்தவர்கள் சேர அனுமதியுண்டா?
* அப்படி அனுமதி இருப்பின், போரில் சிலரை கொல்லும்படி வந்தால் என்ன
செய்வார்கள்? "உங்களை பகைக்கிறவர்களை நேசியுங்கள்" என்ற கொள்கையை
மீறும்படியாக ஆகிவிடாதா?
* ஒருவேளை வன்முறையாளர்களிடம் இருந்து, தீவிரவாதிகளிடமிருந்து
கிறிஸ்தவர்களை பாதுகாக்க அரசாங்கம் தவறினால் அப்போது கிறிஸ்தவர்கள் என்ன
செய்ய வேண்டும்?

இஸ்லாம் பற்றிய கீழ்கண்ட கேள்விகளுக்கு நாம் பதிலளிக்க முயல்கிறோம்:

* முஹம்மது எப்போதாவது சமாதான பாதையில் சென்றிருக்கிறாரா? அல்லது
எப்போதுமே யுத்தம் செய்துக்கொண்டே இருந்தாரா?
* பட்டயத்தை பற்றிய முஹம்மதுவின் கொள்கை என்ன?
* கருப்புக்கல் வைக்கப்பட்டு இருக்கும் புனித ஸ்தலமான மக்காவில் உள்ள
காபா பற்றி முஹம்மதுவின் கருத்து என்ன?
* சமாதானம் அல்லது வன்முறை என்ற இரு பாதைகளில் செல்ல அவருக்கு
வாய்ப்பு இருந்ததா? அல்லது இரண்டு பாதைகளிலும் ஒரே நேரத்தில் செல்ல
அவர்களுக்கு வாய்ப்பு இருந்ததா?
* போர் பற்றிய‌ அனேக வசனங்கள் குர்‍ஆனில் ஏன் காணப்படுகிறது?
* குர்‍ஆனில் உள்ள போர் சம்பந்தப்பட்ட வசனங்கள் கலாச்சாரம் மற்றும்
வரலாற்று எல்லைகளுக்கு உட்பட்டதா? அவற்றுக்கு காலாவதி தேதி என ஏதாவது
உண்டா?
* குர்‍ஆனில் சமாதானம் மற்றும் அமைதி சம்மந்தப்பட்ட வசனங்கள் உள்ளனவா?
* "ஜிஹாத்" என்றால் உண்மையில் அர்த்தம் என்ன?
* "கிதல் – Qital" என்ற‌ வார்த்தையின் அர்த்த‌ம் என்ன?
* ஜிகாத் எனும் புனித‌ப்போரை ந‌ட‌த்துவ‌த‌ற்கான‌ ச‌ட்ட‌திட்ட‌ங்க‌ள்
ஆரம்ப கால இஸ்லாமில் இருந்ததா?
* அப்படி கேற்கண்ட சட்டங்கள் இருந்திருக்குமானால்? அவை யாவை?
* ம‌ர‌ண‌ம் ம‌ற்றும் வரி செலுத்துதல் குறித்து முஹம்மது என்ன‌
நினைத்திருந்தார்?
* யூத‌ர்க‌ளுட‌னான‌ முஹம்மதுவின் உற‌வு எப்ப‌டி இருந்த‌து?
* அவ‌ர் ம‌ரித்த‌ பின்பு எப்ப‌டி ஆர‌ம்ப‌ கால‌ முஸ்லீம்க‌ள் அவ‌ர‌து
கொள்கைக‌ளை பின்ப‌ற்றின‌ர்?
* ஆர‌ம்ப‌ கால‌ முஸ்லீம்க‌ள் போர் தொடுத்தார்க‌ளா?
* குர்‍ஆனையும் முஹம்மதுவையும் எங்ஙண‌ம் அவ‌ர்க‌ள் பின்ப‌ற்றினார்க‌ள்?
* ஆர‌ம்ப‌ கால‌ இஸ்லாம் நீதியை (Justice) எப்ப‌டி வ‌ரைய‌றுக்கிற‌து?
* ம‌ர‌ண‌ம் ம‌ற்றும் வரி செலுத்துதல் குறித்து ஆரம்ப கால
இஸ்லாமியர்களின் கருத்து என்ன?
* மார்க்க‌த்திற்காக‌ உயிர்விடுத‌ல் அல்ல‌து இர‌த்த‌ சாட்சிக‌ள்
குறித்து இஸ்லாம் போதிப்ப‌து என்ன?
* இஸ்லாமை சீர்திருத்த முடியுமா? சீர்திருத்த முடியுமென்றால், அதனை
அடைவது எப்படி?
* சீர்திருத்தம் தேவை என்று இஸ்லாம் நினைக்கிறதா? "உண்மைக்கு"
சீர்திருத்த‌ம் தேவைப்படுமா?

இவ்விரு மார்க்கங்களின் வரலாற்று பிண்ணனியங்களை ஆராய்வதன் மூலமும்,
மேற்கண்ட கேள்விகளுக்கு இப்பிண்ணனியங்கள் வாயிலாக விடைகாண விழைவதுமே நாம்
தெளிவடைய ஒரே வழியாகும். இந்த தெளிவை நாம் அடைந்தால் தான் "நாம் எவைகளை
மாற்றிக்கொள்ளவேண்டும்" என்ற முடிவை எடுக்க முடியும்

இவ்விரு மார்க்கங்களையும் தலைப்பு ரீதியாக ஒன்றன் பக்கத்தில் ஒன்றை
வைத்து ஆராய்வோம். இவ்விரு மார்க்கங்களின் சில தலைப்புக்கள் ஒரே
கட்டுரையிலும் ஒப்பிடப்பட்டு இருக்கும்.

இஸ்லாமிய கிறிஸ்தவ உறவுக்கு இதன் வாயிலாக ஏதாவது நல்லுறது ஏற்பட வழியுண்டா?

இவ்விரு மார்க்கங்களின் மரபியல் கூறுகளை (அடிப்படை கட்டளைகளை) அதன்
மூலத்திலிருந்தே ஆராய ஆரம்பிப்போம்.

இந்த தொடர் கட்டுரைகளின் பட்டியல்

1. Introduction - இப்போது படித்துக்கொண்டு இருக்கும் கட்டுரை
2. The Mission of Jesus and the Sword
3. The Mission of Muhammad and the Sword
4. The Gospels and the Sword
5. The Quran and the Sword
6. Two Kinds of Swords
7. The Early Church and the Sword
8. The Early Muslim Community and the Sword
9. The Sword and the Jews
10. Martyrdom and the Sword
11. Q & A on the Sword
12. Conclusion

பின் குறிப்பு:

[1] இந்த தொடர் கட்டுரைகளில் "பட்டயம்" அல்லது "வாள்" என்ற
வார்த்தையானது, எல்லா வகையான ஆயுதங்களை குறிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது.
அதாவது, இக்காலத்தில் வன்முறைக்கு பயன்படுத்தப்படும் ஆயுதங்களும் இதில்
அடங்கும். மேலும், உடல் ரீதியாக கொடுமைப்படுத்துதல், யுத்தம் செய்தல்,
கொலை செய்தல், வன்முறையில் ஈடுபடுதல் மேலும் தற்காப்பிற்காக வாளை
பயன்படுத்துதல் போன்ற அனைத்தையும் குறிக்க இவ்வார்த்தை
பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஆங்கில மூலம்: Introduction to the Sword in Early Christianity and Islam

ஆசிரியர் ஜேம்ஸ் அர்லண்ட்சன் அவர்களின் இதர கட்டுரைகள்

Tamil Source: http://www.answering-islam.org/tamil/authors/arlandson/sword/01.html

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

இஸ்லாம் பற்றி அதிகமாக அறிய இங்கே clik செய்யவும்

Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

More than a Blog Aggregator

Locations of visitors to this page


My blog is worth $1,693.62.
How much is your blog worth?

free hit counter